விஸ்வரூபம் எடுக்கும் திமுகவினரின் சொத்துப் பட்டியல் விவகாரம் : அண்ணாமலை கையில் எடுத்த அடுத்த அஸ்திரம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2023, 7:21 pm
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் திமுகவுக்கு ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை சுமத்தி வருகிறார்.
அண்மையில் வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியல் தமிழகத்தை உலுக்கி விட்டது. அந்த வகையில் ஊழலுக்கு எதிராக பயணிப்போம் என்று திமுகவை பற்றி தொடர்ச்சியான கேள்விகளை முன்வைப்போம் என கூறினார்.
பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை மீதும் திமுகவினர் ரபேல் வாட்ச் பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் அண்ணாமலை சொன்ன விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என திமுகவினர் கூறியிருந்தனர்.
அதே போல திமுக முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலுக்கு எதிராக யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் அறிவித்த அண்ணாமலை, தற்போது கர்நாடக தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்.
கர்நாடக தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறும் நிலையில், அங்கு தேர்தல் பணிகள் முடிவும் தருவாயில் உள்ளதால் ஜூன் மாதம் முதல் அண்ணாமலை தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.
இதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன வரும் பத்தாம் தேதி கர்நாடக தேர்தலில் வாக்கு பதிவு முடித்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பிறகு அங்கே அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதன் பின்னர் தமிழகம் வரும் அண்ணாமலை, ஜூன் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதற்கான அறிவிப்பு இரண்டு ஒரு வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது பாரதிய ஜனதா கட்சி 9 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகள் என்ன கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லிய திட்டங்களை, செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டி அண்ணாமலை மக்களை சந்திக்க உள்ளார். மேலும் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை முன்வைத்து அவரது சுற்றுப்பயணம் இருக்கும் என சொல்லப்படுகிறது