திமுக அரசு தன் மீதுள்ள குற்றத்தை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2024, 6:50 pm

தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் தந்தை உயிரிழந்தது தொடர்பாக நேரில் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தேன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலுமாக சீர்கெட்டுபோய் உள்ளது. அன்றாடம் கொலை, கொள்ளை என அரங்கேறி வருகின்றது

தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே கிடையாது
இதுவரை ஜனவரி மாதத்தில் இருந்து 595-கொலைகள் நடைபெற்று உள்ளது. அன்றாட சம்பவமாக கொலைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

காவல்துறையை ஏவல்துறையாக வைத்துள்ளது திமுக அரசு.
காவல்துறைக்கு முழு அதிகாரத்தை திமுக வழங்க வேண்டும். ஆடு,மாடுகளை வெட்டும் கசாப்பு கடைபோல் தமிழகம் செயல்பட்டு வருகின்றது.

கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகாரத்து வருகின்றது வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா போன்ற போதை பொருள் வருகின்றது அதனை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் இளைஞர்கள் போதை பழக்க்கதிற்கு அடிமைதாகி வருகின்றனர் இதனை அரசு வேடிக்கை பார்ப்பது என்பதை அதிமுக வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கொலைகள் நடந்துள்ளது இதுவரை கொலையாளிகள் சரியாக கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், பெண்கள், என யாருக்கும் பாதுகாப்பு என்பது இல்லை. மக்கள் மத்தியில் திமுக மீது வெறுப்பு அதிகரித்து உள்ளது அதனால்தான் நேற்று மத்திய அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. வரப்போகும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026-சட்டமன்ற தேர்தல் ஆகியவைகளில் வெற்றிபெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஆக்க பூர்வமான முடிவுகளை எடுப்போம்.

பாஜக உடன் கூட்டணி என்பது இனி கிடையாது. தமிழகத்தில் நாங்கள் ஆட்சி செய்தபோது பல திட்டங்களில் ஒன்றான கால்நடை ஆராய்ச்சி மைய்யம் 1000-கோடி ரூபாயில் கொண்டு வந்தோம்

தமிழகத்தில் ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பூங்கா பாழடைந்த கிடக்கின்றது.

சிவகங்கையில் திமுக நிர்வாகி ஒருவர் அரசு ஊழியரை நாற்காலியை தூக்கி அடிக்கின்றார் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுக்காப்பு என்பது இல்லாமல் இருக்கின்றது

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 207

    0

    0