புதுவையின் அடையாளங்களை அழிப்பது ஏன்?…சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மூட எதிர்ப்பு: தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Author: Rajesh
17 May 2022, 1:20 pm

புதுச்சேரியில் உள்ள பழமையான சுதேசி-பாரதி பஞ்சாலைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற அருகே 50 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகள் இயங்கி வருகிறது மேலும் இதில் 340 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வரும் நிலையில் இரு பஞ்சாலைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பழமையான இரு ஆலைகளை மூட எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து பஞ்சாலைகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சட்டமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 50 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்று மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி