போராட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு… காவல்துறை போட்ட தடை : உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தலால் உற்சாகத்தில் ஆர்எஸ்எஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 11:17 am

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அக்டோபர் 2-ம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரியதால் சட்டம் ஒழுங்கு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ல் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர் எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில் காவல்துறையின் அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது ஆர்எஸ்எஸ். இதையடுத்து அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யுங்கள் என நீதிபதி அறிவுறுத்தலை அடுத்து ஆர்எஸ்எஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

அதே வேளையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அக்டோபர் 2ஆம் தேதி எந்த அமைப்பினம் ஊர்வலமோ, போராட்டங்களோ நடத்த அனுமதியில்லை என காவல்துறை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி