பிடிஆர் OUT… டிஆர்பி IN? தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்? புதியதாக இரண்டு அமைச்சர்கள்? பரபர தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 4:21 pm

தமிழகத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் மாறி மாறி இருந்து வந்த நிலையில், எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்தார்.

இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில், தமிழகத்தில் புதிய தலைமையானது உருவானது.

எனவே யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

2021 மே 7ஆம் தேதி முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றார். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு வருடங்கள் ஆகி உள்ள நிலையில் அமைச்சரவை மாற்றமானது நடைபெறவில்லை.
அமைச்சர்களுக்கு இடையேயான துறைகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டு முடிவடைந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ள நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளை பொறுத்து மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஆதிதிராவிடர் துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட இருப்பதாகவும் அந்த பொறுப்பிற்கு முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அதே போல பால்வளத்துறை அமைச்சர் நாசர், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், ஆகியோர்களும் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்களே இல்லாத நிலையில் பக்கத்து மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டி ஆர் பாலுவின் மகனான டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜாவுக்கு எந்த துறை ஒதுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பிடிஆர் பதவி பறிக்கப்படுமா அல்லது டிஆர்பி ராஜாவுக்கு வேறு துறை ஒதுக்கப்படுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே 10ஆம் தேதிக்கு பிறகு வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்கூட்டியே மாற்றம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ