இந்த கூமுட்டை மக்களுக்கு என்ன செஞ்சீங்க…? வாக்கு கேட்டு சென்ற காங்., எம்பி ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய நபர்!

Author: Babu Lakshmanan
6 April 2024, 11:06 am

கரூர் அருகே தேர்தல் பரப்புரைக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 5 வருடமாக மக்களை சந்திக்க வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு நிலவியது.

கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், நடந்தை ஊராட்சிக்குட்பட்ட வேட்டையார் பாளையம் கிராமத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி பிரச்சாரத்திற்கு சென்றார். அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது பிரச்சாரத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், “கடந்த 5 வருசத்துக்கு முன்னாடி உங்களை நம்பிதான் ஓட்டுபோட்டோம்! இந்த ஊர்பக்கம் வந்தீங்களா? இந்த ஊருக்கு எதாவது செஞ்சீங்களா? என சரமரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்… விடிய விடிய சீரழித்த கும்பல் ; திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

அப்போது அந்த பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத அந்த நபர், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டு போட்ட எங்களுக்கு கேள்வி எழுப்ப உரிமை இல்லையா..? என்றும், கேள்வி எழுப்பினாலே அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என பேசுவதாக தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 298

    0

    0