ஆளுநரா? முதலமைச்சரா? விவாதத்திற்கு நான் ரெடி..நீங்க ரெடியா? முத்தரசனுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2022, 1:56 pm

புதுச்சேரி : ஆளுநர் அழைப்பை அரசியலாக பார்க்கவேண்டாம் அப்படி பார்த்தால் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க நேரிடும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவில் கூடுவோம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருந்து அளிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், என். ஆர். காங்கிரஸ் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ்,திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பொய்க்கால் குதிரை, மயில் ஆட்டம், மல்லர் கம்பம், பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உணவு வகைகளான குதிரைவாலி புட்டு, குதிரை வாலி பொங்கல், இளநீர் பாயசம். முடக்கத்தான் கீரை தோசை ஆகியவைகளை பாரம்பரிய உணவு வகைகளை விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டது.

மேலும் ஆளுநர் மாளிகை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தன. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழாவைத் தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் தனிப்பட்ட விருந்தை காங்கிரஸ், திமுக புறக்கணித்தது ஏன் என என்னுடைய அழைப்பை அரசியலாக நினைக்க வேண்டாம்.

இது தமிழ் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல, இது ஒரு தமிழ் விழாவிற்கு நான் அழைத்து உள்ளேன் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நான் பயணித்து கொண்டிருக்கிறேன், காரணம் இல்லாமல் புறக்கணிக்க வேண்டாம்.

எல்லாத்தையும் அரசியல் புறக்கணித்தால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது, தமிழர் திருநாள் என்று தான் நான் அழைத்தேன், ஆளுநர் அழைப்பை அரசியலாக பார்க்கவேண்டாம் அப்படி பார்த்தால் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

மேலும் முத்தரசன்க்கு புதுச்சேரி குறித்து என்ன தெரியும் அவர் தமிழகத்தில் உள்ளார், அவர் என்னை சூப்பர் முதல்வராக செயல்படுவதாக கூறி உள்ளார். ஆனால் நான் சூப்பராக செயல்படுகிறேன் என்பதை மட்டும் கூறி கொள்வேன்.

இதை பற்றி புதுச்சேரியில் உள்ள யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் என் செயல்பாடுகளை குறித்து என்று கூறிய அவர். தமிழிசைக்கு நிர்வாக திறமை இல்லை என்று முத்தரசன் கூறினால் விவாதத்திற்கு நான் தயார் எனவும் கூறினார்.ஒரு சகோதரத்துடன் தான் நான் செயல்படுகிறேன் இதனை முதலமைச்சரிடமே கேட்கலாம் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு அதிக வாய்புள்ளதா என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பியதர்கு ஆளுநர் தமிழிசை கை எடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 1504

    0

    0