எல்லாம் பிரைன்: லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்: ஆந்திராவில் கைதான டிரைவர்…!!

Author: Sudha
5 August 2024, 10:54 am

லாரியில் ரகசிய அறை அமைத்து ஆந்திராவின் பல்நாடு பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்த முயன்ற பாண்டிச்சேரியை சேர்ந்த ஓட்டுநர் திவாகர் என்பவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

ராஜமகேந்திரவரம் நகர போலீசார் நேற்று திவான் செருவு என்னும் பகுதியின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

லாரியில் இருந்த 443 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த ஓட்டுநர் திவாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Karthi meets Lokesh Kanagaraj டில்லி ரிட்டர்ன்ஸ்…கைதி 2 தயார்…நடிகர் கார்த்தி கொடுத்த சர்ப்ரைஸ்.!