அநாவசியமாக சத்தம் போட்டால் இப்படித்தான்… அமைச்சர் உதயநிதியை சீண்டிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 1:08 pm

சனாதனத்தை ஒழிப்போம் என சொல்லிவிட்டு சபாநாயகர் இப்படி பேசலாமா…? என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 33% மகளிருக்கான இட ஒதுக்கீட்டை இந்தியாவில் உள்ள அனைத்து மகளிரும் கொண்டாட வேண்டும். நாடு முன்னேறி வருவதற்கான முதல்படி இது. 10 ஆண்டுகளாக இந்த நாடு பல்வேறு வகைகளில் முன்னேறி வருகிறது. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் நாட்டை பாதுகாத்தார்கள் என்பது நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என முதல்வர் சொல்வது சரியில்லை, எனக் கூறினார்.

நீட்டில் பூஜ்ஜியம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- நாட்டில் 70,000 உயர்கல்வி படிப்புகள் உள்ளது. 3000 – 4000 இடங்கள் காலியாக உள்ளது. கடந்த வருடமும் காலியாக இருந்ததால் தளர்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே 2 ரவுண்டு முடிந்துவிட்டது. நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்காக குறிப்பிட்ட படிப்புகளுக்கான இடங்களுக்கு one time relaxation என்பது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

120 % இடங்கள் மருத்துவக்கல்லூரியில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 35,000 லிருந்து 75,000 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 320 மருத்துவக்கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பலனடையும் மக்களை பார்ப்பதில்லை. ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. 3வது ரவுண்டகளில் உள்ளவர்களுக்கு one time relaxation தான். காலியாக இருப்பதை விட 4000 இடத்திற்கான ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றவர்கள் வர வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மருத்துவத்துறையின் நேரத்திற்கு ஏற்ப சீரமைப்பு, இந்த நேரத்திற்கான முடிவு.

வெளிப்படையாக உள்ள இந்த கலந்தாய்வில் அரசு, தனியார் கல்லூரிகள் பலனடைவார்கள். மருத்துவத்துறை பலனடையும் திட்டத்தை அனாவசியமாக அரசியல் செய்து வருகின்றனர், எனக் கூறினார்.

சபாநாயகர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் 96% இந்துக்கள், கிறிஸ்தவர்களால் படித்தார்கள் என சொன்னது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஏற்றத்தாழ்வை யார் கொண்டு வருகிறார்கள்? சனாதனத்தை ஒழிப்போம் என சொன்னவர்கள், இன்று ஏன் இந்த வேறுபாட்டை பேசுகிறார்கள்? மத, சாதி வேறுபாடு பேசலாம். நலம் பயக்கும் பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது. என்ன செய்தீர்கள்?

நான் அரசியல் பேச முடியாது, எனக்கு அறிந்தவர்கள் சொன்னார்கள். 0 அரசியல் நடக்கிறது, அதனால் 0 பாயிண்ட் என்று சொல்கிறார். இவ்வாறாக பேசி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள், என தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தொடர்பான கேள்விக்கு, அநாவசியமாக சத்தம் போட்டால், சட்ட ரீதியாக சந்திக்க வேண்டும். எவ்வளவு மோசமாக பெண்ணியத்தை சிந்திக்கிறார்கள். இவரே நடித்து விட்டு நடிகர்களை தவறு என்று சொன்னால், இவர்களுடைய பொதுநோக்கு புரியவில்லை?. இன்று குடியரசு தலைவருக்கு ஆதரிக்கும் இவர்கள், ஏன் குடியரசு தலைவராக ஆதரிக்கவில்லை. பெண், பழங்குடியினர், கீழ் நிலையில் இருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் கட்சி எல்லை கடந்து வாக்களித்து இருக்க வேண்டும், எனக் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 299

    0

    0