களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர்.. தீவிரமடைந்த போராட்டம் : உடனே வெளியானது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு தேதி விபரம் !!

Author: Babu Lakshmanan
6 January 2023, 4:14 pm

புதுக்கோட்டை : தச்சங்குறிச்சியில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வேறு தேதியில் நடைபெறும் என முக்கிய அறிவிப்பை ஆர்டிஓ வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், பரபரப்பான சூழ்நிலை தச்சங்குறிச்சி உருவானது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஊர்மக்களும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக வந்த காளை உரிமையாளர் ஒருவர் தனது காளையை ஜல்லிக்கட்டு திடலில் திடீரென்று அவிழ்த்து விட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தச்சங்குறிச்சி வருகை தந்து விழா கமிட்டினர் பொதுமக்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவரிடம் விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள், பெண்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீங்கள்தான் முன்னின்று ஜல்லிக்கட்டு தர வேண்டும் என்றும் அவருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் விழா கமிட்டி தான் ஆகிரும் நீண்ட நேரம் ஆலோசனை இடத்தில் விஜய் பாஸ்கர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு மூன்று தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்குள் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை செய்து விடுவார்கள் என்று உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜய்பாஸ்கர் பேசியதாவது :- புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் திடீரென்று ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்காதது வருத்தத்துக்குரியது. மாவட்ட நிர்வாகம் விழா கமிட்டியோடு இணைந்து பேசி என்னென்ன குறைகள் உள்ளதோ, அதனை முன்னதாகவே போக்கி முதல் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. மூன்று தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சி நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குருச்சியில் நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்று ஜல்லிக்கட்டு நடக்காததற்கு அரசியல் காரணங்கள் உள்ளது என்று மனதிற்குள் இருந்தாலும், அதனை வெளிக்கொண்டு வராமல் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோணத்தில் நான் பயணிக்கிறேன். ஒருவேளை மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், நானே முன் நின்று போராட்டம் செய்வதற்கு தயாராக உள்ளேன். அதற்கான சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் உருவாக்காது என்று நினைக்கிறேன்.

மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும் அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் நடந்து கொள்வது வேதனைக்குரியது. பொதுமக்கள் தங்களுடைய ஆதங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் ஜல்லிக்கட்டு அனுமதி அளிக்காதது குறித்து பல கருத்துக்களை அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அரசியல் காரணங்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தச்சங்குறிச்சி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஜனவரி 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு, 8ம் தேதி நடக்கும் என ஆர்டிஓ அறிவித்துள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 603

    0

    0