அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜெயில்ல போடுங்க : பிரேமலதா விஜயகாந்த் திடீர் கொந்தளிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2023, 11:42 am
Quick Share

மதுரையில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

மல்யுத்த வீராங்கனை பாலியல் விவகாரம் குறித்த கேள்விக்கு: அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான தீர்ப்பை மத்திய அரசு வழங்கவில்லை, அது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிற்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை, அந்தத் துறையை சேர்ந்தவர்களே இதை செய்வதாக சொல்கிறார்கள் அவர்களுக்கு தீர்ப்பு வரவில்லை என்பதற்காக அந்த பதக்கங்களை கங்கையில் போடுவதாக சொல்லி இருந்தார்கள் அது தடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்குரிய நியாயம் கிடைக்க வேண்டும்.

மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு: ஏற்கனவே பாஜக ஆட்சியின் போதும் இதுதான் சொன்னார்கள் தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் மேகதாது பற்றி பேசுகிறார்கள் உறுதியாக மேகதாது அணை கட்டுவதை தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்தத் துறை தமிழக அமைச்சரும் மேகதாது வராது என்று சொல்லி இருக்கிறார். அதை மீறி அனைவரும் என்றால் இரண்டு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனை ஏற்படும் ஏற்கனவே பாலைவனமாக இருக்கும் தமிழ்நாடு மேகதாது அணை வந்தால் சொல்ல வேண்டாம், மத்திய அரசும் நமது மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கு பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டார் அது பெரிதல்ல. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை நிச்சயம் பெற்று தர வேண்டும்.

செந்தில் பாலாஜி மீது வருமான வரி சோதனை குறித்த கேள்விக்கு:
அதுதான் திராவிட மாடல். தங்கள் கடமையை ஆற்றுவதற்காக வரும் அதிகாரிகள் தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்று ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை சொல்கிறது. காவல்துறை இன்று ஏவல்துறையாக மாறி உள்ளது வன்மையாக கண்டிக்க வேண்டியது.

அதிகாரிகளை தாக்கி இருக்கிறார்கள், ஆனால் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்க கூடியது. அதிகாரிகளை அல்ல செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் அப்போதுதான் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும் தான் தண்டனைக்குரியவர்கள்.

செங்கோல் விவகாரம் குறித்த கேள்விக்கு: செங்கோல் தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைப்பதற்காக மையத்தில் வைத்துள்ளார்கள். இதற்கு முன்பாக அந்த செங்கோல் எங்கிருந்தது என்று யாருக்கும் தெரியாது. தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்ற அவர்கள் எடுத்து வைக்கும் போது அதில் எதற்கு சர்ச்சை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை.

முதல்வர் சிங்கப்பூர் பயணம் குறித்த கேள்விக்கு: பயணம் வெற்றி அடைந்து விட்டது என்று சொல்கிறார் ஏற்கனவே துபாய் சென்று வந்தது எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது எத்தனை இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது என்று தெரியவில்லை.

இந்த முறை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார் ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லியுள்ளார் பொருத்திருந்து பார்ப்போம் என்றார்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 436

    0

    0