திருப்பதி, சபரிமலையில் கை வைச்சுட்டு அப்புறமா தமிழக கோவில்களுக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு சீமான் சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2023, 11:42 am
திருப்பதி, சபரிமலையில் கை வைச்சுட்டு அப்புறமா தமிழக கோவில்களுக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு சீமான் சவால்!!
சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லையா அவருக்கு? மண்ணடியில் இருக்கிற காளிகாம்பாள் கோவிலுக்கு அறங்காவலர் நியமனத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
உடனே எங்கே இருந்து பிரதமர் மோடி தமிழ்நாடு கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது பேசுகிறார் பாருங்க? நாட்டில் இது பிரச்சனையா அவருக்கு?
நான் என்ன சொல்கிறேன்.. என் மாநில கோவில்களை நீங்க எடுங்க.. எல்லாத்தையும் நீங்களே எடுங்க.. கல்வியை எடுத்துட்டுப் போய் விற்றுவிட்டீர்கள். மருத்துவதுறையை எடுத்துக் கொண்டு போய் விற்றாச்சு.. குடிநீரை விற்றாச்சு.. தெருவோர சாலைகளைப் போட்டு 100 கி.மீக்கு ஒருத்தருக்கு டெண்டர் விட்டாச்சு.. இதனையும் எடுத்துக் கொண்டு போய் விற்றுவிடுங்களேன்..
ஆனால் மகாராசா, முதலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை எடுங்க.. அப்புறம் சபரிமலை ஐயப்பன் கோவிலை கேரளாவில் எடுங்க.. அவன் கொடுத்துவிட்டால் என் கோவிலையும் எடுத்துட்டு போங்க.. கை கட்டி நிற்கிறேன். எடுத்திருங்க பார்க்கலாம்?
அப்படியே…. பஞ்சாப் பொற்கோவிலையும் எடுத்துடுங்க.. கொன்னே போடுவான்.. இதெல்லாம் மக்களுக்கு ஒரு பிரச்சனையா தம்பி? அரசு எங்ககிட்ட இருக்கும் போதே 2800 சிலைகளைக் காணவில்லை. எங்க போச்சுன்னு தெரியலை? இது ஒரு பிரச்சனையா?
ஒருநாட்டின் பிரதமர் பேசுகிறார்.. காவிரி நதிநீருக்காக “இந்தியா” கூட்டணியில் இருக்கிற இரண்டு கட்சிகள் சண்டை போடுவதாக பிரதமர் மோடி பேசுகிறார்.
காவிரி நீருக்கும் பிரதமர் மோடிக்கும் சம்மபந்தமே இல்லை? எங்களுக்கு அவர் பிரதமர் இல்லை? காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத் தரும் கடமை அவருக்கு இல்லை? எவ்வளவு பொறுப்பற்ற வார்த்தையை பேசுகிறார் பிரதமர் மோடி… போன முறை கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்த போது காவிரி நீரை தர சொன்னீர்களா?
தமிழரை அடித்து விரட்டியபோது தலையிட்டு தீர்வு கண்டீர்களா? எங்களுக்கு எல்லாம் வேறு ஒருவர் பிரதமர் இருப்பது போலவே பேசுகிறார்.. இவ்வாறு சீமான் பேசியதாக அந்த வீடியோ பகிரப்படுகிறது.