திமுக ஆட்சியை அகற்றியே ஆகனும்.. காரணங்களை அடுக்கிய கிருஷ்ணசாமி… NDA கூட்டணிக்கு ஆதரவாகக் குரல்..!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 3:53 pm

திமுக ஆட்சியில் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், சட்ட ஒழுங்கு அடியோடு சீர் அழிந்து விட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி:- 2021 சட்டமன்ற தொகுதி 505 வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது. நீட் தேர்வு, மாதம் ஒரு முறை மின் கணக்கு எடுப்பு போன்ற பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் 28 மாதங்கள் வாக்குறுதியை ஒன்று, இரண்டு மட்டும் திமுக நிறைவேற்றி உள்ளது.

தமிழகத்தில் இரவு பகலாக மணல்கள் கடத்தப்பட்டு அண்டை மாநிலமான கேரளா,கர்நாடகாவிற்கு திமுகவினர் மணல் சப்ளை செய்து வருகின்றனர். 16 டயர்கள் இருக்கக்கூடிய லாரிகளில் செங்கோட்டை, தேனி, கோவை தமிழக எல்லையில் இருந்து மணல்கள் கடத்தப்பட்டு வருகின்றனர்.

சாலைகளை போடாமல் சாலைகள் போட்டதாக திமுக கணக்கு காட்டி நாடகமாடி வருகிறது. டாஸ்மார்க் மூலமாக இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் மது குடித்துவிட்டு குடும்பங்களில் பிரச்சனை உண்டாகி வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் அழிந்து சந்திசிரிக்கிறது.

ஆகையால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும், என்று வலியுறுத்துனார்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 394

    0

    0