சென்னை ; சென்னையில் போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி திடீரென ஆளுநரை சந்தித்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், சட்டவிரோத பார்களை அறவே ஒழித்திடவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியானது சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்றது.
இந்த பேரணியில் புதிய தமிழகம் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி தலைமையிலான அமமுகவினரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், எந்த காரணத்தை கொண்டும் பார்களில் மது விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது. மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் கிராமங்கள், நகரங்களில் மது விற்பனைக்கு அனுமதிக்க கூடிய நிலைமையை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் முதற்கட்டமாக , எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
இந்த பேரணியில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பங்குபெற வேண்டும் என்ற அழைப்பின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்ட அமமுகவினரும், பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியினரும் ஆதரவு தந்து பங்கேற்றுள்ளனர். இதற்கு பிறகாவது, மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கருதுகிறேன்.
2021 ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் எல்லா இடங்களிலும் கருப்பு சட்டை அணிந்து மதுவிலக்குக்காக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதை பரவலாக்க கூடிய வகையில் பணியாற்றுகிறார்களே தவிர, அதை அமல்படுத்த எவ்விதமான நடவடிக்கையை எடுக்கவில்லை.
இந்த போராட்டம் துவக்கமே தவிர முடிவல்ல. இனி அடுத்த போராட்டம் எப்படி இருக்கும் என்று சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் என்பதையும், இந்த பேரணியின் நிறைவாக ஆளுநரை சந்தித்து 250 பக்கங்கள் கொண்ட மனுவை அளிக்க இருக்கிறோம். அந்த மனுவின் விபரங்களையும் நாம் வெளியிடுவோம், என்று கூறினார்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.