பரவும் மஞ்சள் காமாலை; கண்டு கொள்ளவில்லையா நிர்வாகம்?10 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; பொதுமக்கள் பீதி;..

Author: Sudha
11 July 2024, 9:58 am

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அசுத்தமான தண்ணீரே காரணம் என அங்குள்ள மக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

10பேரில் சிலர் தனியார் மருத்துவமனையிலும், சிலர் அரசு மருத்துவமனையிலும், ஒரு சிலர் நாட்டு மருந்து வைத்தியத்தையும் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அப்பகுதி மக்கள் மஞ்சள் காமாலை தொற்றால் ஏற்கனவே ஒரு குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரமாக மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.நோய்த் தொற்றை கண்டறியவும் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயலோக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொது மக்கள் இது குறித்து அச்சமைடய தேவையில்லை எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் சொல்லி உள்ள மாவட்ட நிர்வாகம் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?