4 மாதங்களுக்கு பின் மீண்டும் எம்பி ஆனார் ராகுல்காந்தி : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளின் முதல் பேச்சாளராக பங்கேற்கிறார்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 10:50 am

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது.

இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், பதவி நீக்கம் செய்யும் போது காட்டிய வேகத்தை மத்திய அரசு திரும்ப பெறும் விவகாரத்தில் காட்டவில்லை என்று விமர்சித்தன.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆகியுள்ளார்.

இதனால்,நாளை தொடங்க உள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பாக முதல் பேச்சாளராக ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?