எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு.. எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி? கூடும் செயற்குழு!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 4:35 pm

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ‛ இண்டியா ‘ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 99 இடங்கள் கிடைத்துள்ளது.

ஆட்சியில் அமர்வதற்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது. பல எம்.பி.,க்கள் இது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும், ராகுலே எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க: இனி கூட்டணியே கிடையாது… ஆடுகளை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்க : அண்ணாமலை சவால்!

விரைவில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தெளிவாக தெரியவரும் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதே போல டெல்லியில் வரும் ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக செயற்குழு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?