ராகுலின் பாத யாத்திரை… விளம்பரத்திற்காக லட்சங்களை வாரி இறைக்கும் காங்கிரஸ் ; வெளியான ஆதாரங்கள்..!!

Author: Babu Lakshmanan
13 December 2022, 8:02 pm

ராகுல் காந்தியின் பாதயாத்திரையை பேஸ்புக்கில் விளம்பரப்படுத்த பல லட்சங்களை காங்கிரஸ் கட்சி செலவு செய்தது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடா பயணம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா என தற்போது ராஜஸ்தானில் தொடர்ந்து வருகிறது. இந்த யாத்திரையில், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் என கலந்து கொண்டு, ராகுல் காந்தியை சந்தித்து வருகின்றனர்.

ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையை காங்கிரஸ் நேரடியாக சமூக வலைதளங்களில் ஒளிபரப்புகிறது. பாதயாத்திரையின் போது எடுக்கப்படும் ஒவ்வொரு படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. இதனை பல லட்சம் பேர் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ படங்கள் மற்றும் வீடியோக்கள் மக்களிடம் தானாக சென்றவில்லை என்பதும், இது ஃபேஸ்புக்கின் விளம்பர செயல்முறை என்பது தெரியவந்துள்ளது.

Andhra Rahul - Updatenews360

ஃபேஸ்புக் விளம்பர நூலகத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, பாரத் ஜோடோவில் பங்கேற்கும் ராகுல் காந்தியின் போட்டோ மற்றும் வீடியோக்கள் மக்களைச் சென்றடைய ஒவ்வொரு பதிவுக்கும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய்களை காங்கிரஸ் செலவிட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இந்தச் செலவுகளில் பெரும்பாலானவை பாரத் ஜோடோ யாத்ராவிற்கு இடையே செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 512

    0

    0