நடைபயணத்தின் போது கலவரம் ஏற்பட்டால் ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 9:21 am

”நடைபயணம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டால் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தான் பொறுப்பேற்க வேண்டும்,” என நாகர்கோவிலில் முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ராகுல் கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்து கேரளா சென்றுள்ளார். அங்கு நுழைந்ததும் நாராயண குரு மண்ணில் கால் பதிப்பதாக கூறியுள்ளார்.

அவர் பெயரை அங்கு கூறாவிட்டால் கேரளாவில் கால் வைக்க முடியாது என அவருக்கு தெரியும். கன்னியாகுமரி அருகே நரி குளத்திலுள்ள பாலத்தை 2019-ல் பிரதமர் மோடி திறந்து வைத்த கல்வெட்டை சேதப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் படத்தை சேதப்படுத்திய காங்., தமிழக தலைவர் அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிய வேண்டும். தவறினால் பா.ஜ.க, சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

பாதயாத்திரையின் போது கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற முயற்சிகளை காங்கிரசார் மேற்கொண்டுள்ளனர். பாதயாத்திரை ஒற்றுமைக்கான பயணம் அல்ல. கலவரத்தை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடை பயணம். இதன்மூலம் ராகுல் சில விதைகளை விதைத்து சென்றுள்ளார்.

ராகுல் கோயில், சர்ச், மசூதிகளுக்கு செல்வதை வரவேற்கிறேன். ஆனால் மத ரீதியாக அரசியல் பேசக் கூடாது. மத தலைவர்களை மதப்பணி செய்ய அனுமதிக்க வேண்டும். 1969- ல் காங்.,ல் பெரிய பிளவு ஏற்பட்டது. அதுபோல தற்போதும் காங்., இடைக்கால தலைவர் சோனியா குடும்பத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்பிரச்னையை மறைக்க ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் என்றார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!