ரயில் விபத்து… சிறுபிள்ளைத்தனமா பேசக்கூடாது : ராகுலுக்கு எல்.முருகன் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2024, 5:28 pm

ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் ஆரியபட்டாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதிகளில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நேற்று நடைபெற்ற திருவள்ளூர் ரயில் விபத்து மற்றும் திருச்சி விமான தொழில்நுட்ப கோளாறு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்னர்தான் எதுவும் கூற முடியும்.

ரயில் விபத்து குறித்து அரசியல் செய்யக்கூடாது. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ரயில் விபத்து குறித்த கருத்து சிறுபிள்ளைத்தனமானது.
10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துக்கள் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…