சர்ச்சையில் சிக்கிய ராகுல் டி- ஷர்ட் : விலையை கேட்டு ஷாக் ஆன தொண்டர்கள்.. பாஜக – காங்கிரஸ் திடீர் மோதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 6:36 pm

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் ‘பாரத் ஜோடோ யாத்ரா'(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இந்த பயணத்தை பா.ஜ., கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், சமுக வலைதளத்தில் பா.ஜ.க, வெளியிட்ட பதிவில், ‘ பாரதமே பார் ‘ என தலைப்பிட்டு, டீசர்ட் அணிந்த ராகுலின் படத்தை வெளியிட்டதுடன், அவர் அணிந்துள்ள டீசர்ட் விலை ரூ.41 ஆயிரம் என காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், ‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் கூட்டத்தை பார்த்ததும் பயம் வந்துவிட்டதா? முக்கிய விஷயத்தை பற்றி பேசுங்கள். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தை பற்றி பேசுங்கள். ஆடை பற்றி தான் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி அணிந்த ரூ.10 லட்சம் மதிப்பு கோட் சூட் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பு கிளாஸ் பற்றியும் பேச வேண்டும் எனக்கூறியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!