சென்னை ; சென்னையில் மழைநீரை அகற்றாமல், அப்படியே கான்கிரீட் கலவையை கொட்டி, மழைநீர் வடிகால் கட்டிய அவலம் நடைபெற்றுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை 36வது வார்டு புருஷோத்தம நகரின் 3வது தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென மழை பெய்ததால், மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வெள்ளம் தேங்கி நின்றது.
இதனால், கான்கிரீட் போடுவதற்காக தயார் செய்யப்பட்ட கலவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இதனை சற்றும் பொருட்படுத்தாத ஊழியர்கள், கான்கிரீட் கலவையை தேங்கிய மழைநீரில் கொட்டி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தனர்.
முழங்கால் அளவு தண்ணீரில் சிமெண்ட் கலவையை எதற்காக கொட்டுகின்றனர் என்ற சந்தேகமும், கேள்வியும் அங்கிருந்த பொதுமக்களிடையே எழுந்தது. ஒருசிலர் என்னதான் நடக்கிறது என்பதை அங்கு பொறுத்திருந்து கவனித்தனர். அப்போது தான் தெரிந்தது, மழைநீரில் கலவையை கொட்டி, மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுவது.
மழை தண்ணீரில் கலவையை கொட்டி கான்கிரீட் அமைத்தால் தரமானதாக இருக்குமா..? என்ற எந்த எண்ணமும் எழாமல் ஒப்பந்ததாரரின் உத்தரவின் பேரில், காரணமே இல்லாமல் கலவையை ஊழியர்கள் கொட்டிக் கொண்டிருந்தனர்.
தண்ணீருக்குள் கலவையை கொடி வீணடித்த அதே வேகத்தில் தண்ணிருக்குள் தரைதளம் செட்டாகி விட்டது போல, பலகையை கொண்டு பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைப்பதற்காக தண்ணீருக்குள் பலகைகளையும் இறக்கினர். இதனை கண்ட பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரவச் செய்தனர்.
இந்த விஞ்ஞான கால்வாய் பணிகளை தடுக்க தவறிய இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.