அம்பேத்கரும்.. மோடியும்..
அண்ணல் அம்பேத்கருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா புத்தக முன்னுரையில் பாராட்டி எழுதிய கருத்து தமிழகத்தில்
மட்டுமின்றி தேசிய அளவிலும் பேசுபொருளாகி உள்ளது.
இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவும், எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்டவையும் வரிந்து கட்டிக்கொண்டு சமூக ஊடகங்களில் மோதிக் கொள்கின்றன.
இந்திய திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக திகழும் இளையராஜாவை காழ்ப்புணர்ச்சியோடும் வன்மத்தோடும், வலைத்தளங்களில் ஏராளமானோர்
கடந்த இரு நாட்களாக விமர்சித்தும் வருகின்றனர்.
முன்னுரை
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை, நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் பற்றி ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார்.
அதில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாஜக பதிலடி
இளையராஜாவின் இந்த கருத்துதான் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜகவினர் அதற்கு தகுந்த பதிலடியும் தரத் தொடங்கியுள்ளனர்.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, இதுபற்றி கூறும்போது, “தமிழகத்தின் மிகப்பெரிய இசை மேதைகளில் ஒருவரின் கருத்துகள் ஆளும் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக இல்லை என்பதற்காக, ஆளும் கட்சிக்கு ஆதரவான சக்திகள் அவரை தூற்றி அவமதிக்கின்றன. இதுதான் ஜனநாயகமா?… ஒருவர் பல்வேறு பார்வைகளை கொண்டிருக்கலாம். அதற்காக ஒருவர் அவமானங்களை ஏன் ஏற்க வேண்டும்?…”என்று கண்டனம் தெரிவித்தார்.
ரஜினியை வம்புக்கு இழுத்த காங்.,
இந்த நிலையில்தான் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய முக நூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ஆரம்பத்தில் இளையராஜாவை பாராட்டுவதுபோல் கூறிவிட்டு, பின்பகுதியில் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
அப்படி ஜோதிமணி என்னதான் அந்தப் பதிவில் சொல்லியிருக்கிறார்?…
“இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று. அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம். ஆனால், அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது.
ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிச, பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று. சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். முன்பு ரஜினிகாந்த், இன்று இளையராஜா. ஆனால் தமிழ் மண் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை, அமைதியை, ஒற்றுமையை, வளர்ச்சியை விரும்புவது. இதற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிச சித்தாந்த்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை, இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது. இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது.
ஒரு கருத்தைக் கூறுவது ஒருவரின் உரிமை. அந்தக் கருத்து சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கருத்துரிமையும், விமர்சிக்கும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது?” என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் கொந்தளிப்பு
இளையராஜாவுக்கு அறிவுரை கூறுவது போல் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஜோதிமணி எம்பி, சந்தடி சாக்கில் நடிகர் ரஜினியையும் இதில் வம்புக்கு இழுத்திருக்கிறார் என்பது அவருடைய பதிவில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்த கருத்து ரஜினி ரசிகர் மன்றத்தினரிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து நடிகர் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தினரும், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ஜோதிமணி எம்பியை வறுத்தெடுத்துள்ளனர்.
“தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி மீது மரியாதை வைத்துள்ளவர் எங்கள் சூப்பர் ஸ்டார் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதேநேரம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் அரசியலுக்கு வர மாட்டேன், கட்சியும் தொடங்க போவதில்லை, தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன் என்று ரஜினி அறிவிக்கும் வரை அவர் தமிழகத்தில் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தபோது மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும். அவர் அரசியலுக்கு வராமல் போனதில் பெரும் பங்கு தமிழகத்தின் ஒரு பிரதான கட்சிக்கு உள்ளது. அக்கட்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களும் பக்கபலமாக நின்றனர்.
எங்கள் தலைவர் எப்படியெல்லாம், திரை மறைவில் மிரட்டப்பட்டார், தடுக்கப்பட்டார் என்பதையும் நாங்கள் அறிவோம். அவர் புதிய கட்சியை தொடங்கி நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சியை கைப்பற்றி விடக்கூடாது
என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.
எனவே இளையராஜாவின் கருத்துக்கு பதில் சொல்வதுடன் ஜோதிமணி நிறுத்திக் கொண்டிருந்தால் அதை கருத்துக்கு எதிர் கருத்து என்று எடுத்துக்கொள்ளலாம்.
அவருக்குள்ள கருத்து சுதந்திரம் என்றும் சொல்லலாம்.
ஆனால் விளம்பரம் தேடுவதிலும், அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்துவதிலும் மட்டுமே
குறியாக இருக்கும் ஜோதிமணி எம்பி அடுத்த முறை தனது தொகுதியில் போட்டியிட முடியுமா? என்ற சந்தேக சூழலில் சுய லாபத்திற்காக எங்கள் தலைவரை வம்புக்கு இழுக்கிறார்.
தேவையின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியை மேற்கோள் காட்டிப் பேசுவது ஜோதிமணி போன்ற தலைவர்களுக்கு அழகல்ல. இனி அவர் இதுபோல் ரஜினி பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். மீறினால் அதற்கான தண்டனையை கடவுள் நிச்சயம் தருவார்” என்று அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
எங்கே போனீங்க..?
இதில் வேடிக்கை என்னவென்றால், ஜோதிமணி முகநூலில் பதிவிட்ட இளைய ராஜாவுக்கு எதிரான அறிக்கைக்கு கீழேயே ஏராளமானோர் தங்களது கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். அதில் அவரை கழுவிக் கழுவி ஊற்றியதுதான் அதிகம்.
அவற்றில் சில:
உங்கள் அரசியல் ஈன பிழைப்புக்கு என் இசை தெய்வம் இசைஞானியை வம்புக்கு இழுக்காதீர்கள். கருத்து சொல்வதற்கு ஒருவருக்கு உரிமை இல்லை என்றால் இந்த நாட்டில் பிறந்ததற்கு அர்த்தம் இல்லையே? அதிலும் அவர் உண்மையான தமிழன்! இங்கே தமிழன் தமிழன் என்று சொல்லி நம்மை அழிக்க நினைக்கும் கூட்டம்தான் அதிகம்.
இப்படி வசைமாரி பொழிவது நீண்டுகொண்டே போகிறது.
ஜோதிமணி எம்பிக்கு இது தேவைதானா?…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.