பாஜகவை வெறுப்பேத்த ரஜினி போட்ட பக்கா பிளான் : சொல்லாத விஷயத்தை சொல்லிய சூப்பர் ஸ்டார்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 4:40 pm

ரஜினிகாந்த் தனது மகள் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் கிரிக்கெட் வீரர்களாக நடிக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்க முடிவு செய்து லைகா நிறுவனத்தை அணுகியபோது, எங்கள் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க வேண்டும் என்றால், இதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று லைகா கண்டிஷன் போட்டதால், தனது மகளுக்காக ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி நடிப்பதால் ஏ.ஆர்.ரஹ்மான் தானாக முன்வந்து இப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டார்.

லால் சலாம் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், லால் சலாம் படத்தின் போஸ்டரைப்பார்த்து இப்படம் மற்றொரு பாட்ஷாவா என்ற பேச்சு எழுந்துள்ளது. ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் இஸ்லாமியராக நடிக்கவில்லை என்றாலும், அந்த படத்தில் தனது பெயரை பாட்ஷா என்று வைத்துக்கொண்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த், ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கு காரணம் என்னவென்றால், சமீபகாலமாக ரஜினி,பாஜகவில் சேரப்போகிறார்,பாஜகவின் விஸ்வாசி என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டுவந்ததை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே, மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அந்த போஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருக்கின்றனர்.
ரஜினி தனது ரசிகர்களை தேசபற்றாளர்களாக, மதம், இனம் சாதி இல்லாதவர்களாக மாற்றும் விதத்தில் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாகவும், இதுவரை தனது படங்களில் சொல்லாத விஷயத்தை, இப்படத்தில் ரஜினிகாந்த் சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர், சொல்லும் சில வார்த்தைகளை சிலர் வேதமாக பார்க்கின்றனர். எனவே மத ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் படமாக லால் சலாம் படம் நிச்சயம் இருக்கும் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 519

    0

    0