ரஜினி மனிதரே இல்ல… அவருக்கு அரசியலும் வேணாம், ஆளுநர் பதவியும் வேணாம் : ஜெயிலர் பட நடிகர் பரபரப்பு பேச்சு!!

ரஜினி மனிதரே இல்ல… அவருக்கு அரசியலும் வேணாம், ஆளுநர் பதவியும் வேணாம் : ஜெயிலர் பட நடிகர் பரபரப்பு பேச்சு!!

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இப்படத்தின் 25 வது நாளை ரஜினி ரசிகர்கள் வெகு விமர்சையாக பல்வேறு திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் 25 வது நாளையொட்டி ஏராளாமான ரசிகர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினி பட பேனர்களுக்கு மாலை அணிவித்து, சூடமேற்றி பூசணிக்காய் சுற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து அம்பிகா திரையரங்கம் முன்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உற்சாகத்தோடு ஈடுபட்டனர்.

தொடர்ந்து அம்பிகா திரையரங்கிற்கு வந்த நடிகர் சரவணனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். தொடர்ந்து ஜெயிலர் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் நடிகர் சரவணனை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சரவணனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சரவணன் பேசுகையில்,
நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் போல. இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என அவருக்கு எல்லாமே தெரியும்.

ரஜினியின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஒரே மாதத்தில் ஹீரோ ஆனவன் நான். ஜெயிலர் படம் ஹிட் ஆகும் எனத்தெரிந்து தான் ரஜினி இமயமலைக்கு சென்றார்.

ரஜினியின் வாக்கு சித்தர் வாக்கு மாதிரி. ரஜினி ஒரு கடவுள் தான்.
ரஜினி ஒரு சித்தர். அதை மதுரையில் உட்கார்ந்து கொண்டு சொல்கிறேன்.
ரஜினி சாரிடம் எல்லாமே எனக்கு பிடிக்கும், அவர் பிடிக்காத ஒன்று என்பது இல்லவே இல்லை. நடந்தால் பிடிக்கும், திரும்பினால் பிடிக்கும்,

ரஜினி சாரை பார்த்து இன்று வரை ரஜினி சார் மாதிரி சட்டை போட்டு வருகிறேன். ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு, ஆளுநர் பதவியெல்லாம் ஒன்றும் அவருக்கு வேண்டாம். அவர் நன்றாக உடல்நலத்தோடு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அவர் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தா போதும். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேணம். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, பாவம் வேணாம். விட்டுருங்க அவர. அரசியலுக்கு அவர் வர வேண்டாம் நிம்மதியாக இருக்கட்டும் என பேசினார். அவர மீடியா அரசியலுக்கு இழுக்காதிங்க.

ஒபிஎஸ் ரஜினி சந்தித்து என்ன பேசினார்கள் என யாருக்குமே தெரியாது. சாப்பிட்டிங்களா குடும்பத்தில் எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கூட பேசி இருக்கலாம் என பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

18 minutes ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

44 minutes ago

கஞ்சா அடிச்சிட்டு அத செஞ்சா… அந்தரங்க வீடியோவில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் முகம் சுழிக்கும் பேச்சு!

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…

52 minutes ago

இரவு பகல் பார்க்காமல் நடித்த அஜித்! ஒரே நாள்ல ரெண்டு ஷூட்டிங்… அடேங்கப்பா!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

1 hour ago

புருஷனோட ஒரு வருஷம் கூட வாழல… கீழ்த்தரமா, கேவலமா பேசினாங்க : மனம் நொந்த சுகன்யா!

நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…

2 hours ago

ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…

விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…

3 hours ago

This website uses cookies.