போயஸ் கார்டனில் புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் : காத்திருந்த ரசிகர்களுக்கு FLYING KISS கொடுத்து உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 10:38 am

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே, 2023 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து கூற போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. உன் வாழ்க்கை உன் கையில்’ என தெரிவித்துள்ளார்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 412

    0

    0