கழுத்தில் மாலை.. இரு கைகளையும் கூப்பி… படப்பிடிப்புக்கு நடுவே அண்ணாமலையாரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்..!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 1:30 pm

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை அருகே உள்ள சத்திரம் பகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை அருகே கிராம பகுதிகளில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்து இயக்கும் படமான லால் சலாம் படப்பிடிப்பு கடந்த 5 நாட்களாக இந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற வருகிறது.

படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் அவர்கள் 26 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ரஜினிகாந்த் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை சாமி தரிசனம் செய்தார்.

ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது, ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துவிட்டு வேகமாக தனது காரில் சென்றார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 521

    0

    0