ரஜினியின் மூத்த மகள் வீட்டில் நகைகள் மாயம்.. கூட இருந்தே குழி பறித்தது இவரா? பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2023, 12:29 pm

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநரான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகைகள், ரைவம், நவத்தின கற்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!