பாஜகவில் ரஜினியின் நண்பர்.. பரபரக்கும் அரசியல் களம் : உஷாரான திமுக.. வெடவெடத்துப் போன அதிமுக!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 2:19 pm

பாஜகவில் ரஜினியின் நண்பர்.. பரபரக்கும் அரசியல் களம் : உஷாரான திமுக.. வெடவெடத்துப் போன அதிமுக!

தமிழருவி மணியன் ரஜினியுடன் இணைந்து கட்சி ஆரம்பிப்பதாக பேசப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டது. அப்படி நடந்திருந்தால் அண்ணாமலை அங்கு இணைவார் என்றெல்லம் பேசப்பட்டது. ஆனால் ரஜினியின் முடிவால் தவிடுபொடியானது.

மீண்டும் தமிழருவி மணியனின் அதிரடி கிளம்பி உள்ளது என்றே சொல்லலாம்… நேற்றைய தினம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, நேற்று திடீரென சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை, ட்வீட் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.”கர்மவீரர் காமராஜரால் ‘தமிழருவி’ பட்டத்தை வழங்கப் பெற்றவர், தனது வசீகரிக்கும் தமிழாலும், கம்பீர சொற்பொழிவுகளாலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, தமிழக அரசியலின் முன்னோடி, எளிமையின் இலக்கணமாக விளங்குபவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வறியாமல் மக்கள் பணிகளை ஆற்றி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அய்யா திரு தமிழருவி மணியன் அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தலைவர்கள் சந்திப்பு என்பது இயல்பான விஷயம் என்றாலும், அதிமுக – பாஜக கூட்டணி பிளவில் உள்ள நேரத்தில், எதற்காக இந்த சந்திப்பு என்று தமிழக அரசியல் களமே பரபரத்துவிட்டது. எனினம், இதுகுறித்து சில தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்ட நிலையில், அதிமுகவுடன் இதுவரை யாருமே கூட்டணி வைக்கவில்லை.. ஜிகே வாசன், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம் உள்ளிட்ட பலரும் ஆதரவாக இருக்கிறார்களே தவிர, கூட்டணியில் உறுதியாக இணைவதாக சொல்லவில்லை.. அதேசமயம், பாஜக பக்கமும் இவர்கள் யாருமே சாயவுமில்லை..

பூவை ஜெகனின் புரட்சி பாரதம், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் எடப்பாடிக்கு ஆதரவை தெரிவித்துள்ளதுபோல, ஐஜேகே பாரிவேந்தர் மட்டும் பகிரங்கமாக தன்னுடைய நிலைப்பாட்டை பாஜகவுக்கு அறிவித்திருக்கிறார்… மற்றபடி வேறு யாருமே கூட்டணியை உறுதி செய்யவில்லை. இந்த வாய்ப்பை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பாஜக முயன்று வருவதாக தெரிகிறது

இப்படிப்பட்ட சூழலில், தனக்கு நெருக்கமாக உள்ள சிறு கட்சிகளை பாஜகவில் இணைக்கும் முயற்சியில் தமிழருவி மணியன் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. சுருக்கமாக சொல்லப்போனால், பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியிலும், திமுக கூட்டணிக்கு செக் வைக்கும் முயற்சிலும் தமிழருவி மணியன் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 378

    0

    0