விடுதலை செய்யப்படுகிறாரா பேரறிவாளன்..? உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை… எதிர்பார்ப்பில் தமிழகம்..!!
Author: Babu Lakshmanan11 May 2022, 9:19 am
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 6 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே, தற்போது பரோலில் இருந்து வரும் பேரறிவாளனை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதாவது, 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளனை விடுவிக்கக்கோரும் வழக்கில் தகுதி அடிப்படையில் வாதிட தயாராக இல்லாததால், நீதிமன்றமே அவரை விடுவிப்பது தொடர்பான முடிவை எடுக்க நேரிடும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது. அப்போது, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0
0