ஒவ்வொரு இந்தியர்கள் மனதிலும் ராமர் வாழ்கிறார்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு செய்த ஆளுநர் ஆர்என் ரவி கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 11:26 am

ஒவ்வொரு இந்தியர்கள் மனதிலும் ராமர் வாழ்கிறார்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு செய்த ஆளுநர் ஆர்என் ரவி கருத்து!!

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது துணைவியாருடன் தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மூலவர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தயார் சன்னதி தாயாரை வழிபட்டார். அதனை தொடர்ந்து கோவில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் அவரும் அவரது துணைவியாரும் ஈடுபட்டனர்.

கவர்னரின் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்.

கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும் என தெரிவித்தார்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!