ஓபிஎஸ் தரப்பு – பாஜகவினரிடையே மோதல்… ராமநாதபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு ; போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
17 April 2024, 8:29 am

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தரப்பினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஜேபி நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

இந்த நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், நேற்றிரவு சூரங்கோட்டை காலனி பகுதிக்கு ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு சற்று தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தொண்டர்களுடன் நீண்ட நேரம் காத்திருந்த ஓபிஎஸ் அணியின் ஒன்றிய செயலாளர் முத்து முருகன் என்பவர், ‘ஏன் இவ்வளவு காலதாமதமாக வருகிறீர்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பதிலளித்து கொண்டிருக்கையில், அவரை முத்து முருகன் தள்ளி விட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர், ஓபிஎஸ் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு!

மேலும், இது குறிதது தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கேணிக்கரை பகுதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே, சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு, 4 ஓபிஎஸ்கள் தலைவலியை ஏற்படுத்தி வரும நிலையில், பாஜகவுடன் தனது ஆதராவாளர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பது அவருக்கு மேலும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 490

    0

    0