ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தேவையில்லாதது.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2023, 11:01 am
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தேவையில்லாதது.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து!!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீனவர்களின் போராட்டம் குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது.
மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்” என்று கூறினார்.