ராணா, ரிங்கு அதிரடி ஆட்டம் : கொல்கத்தா அணிக்கு பிரகாசமான வாய்ப்பு… டஃப் கொடுக்குமா ஐதராபாத்?!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 10:07 pm

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் , பின்னர் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் நிதிஸ் ராணா , ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராணா 42ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து வந்த ரசல் அதிரடி காட்டி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 171ரன்கள் எடுத்து . ஹைதராபாத் சார்பில் மார்கோ ஜான்சன் , நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கினர் ஐதராபாத் வீரர்கள் அபிஷேக் மற்றும் மயங்க். அபிஷேக் 9 ரன்னிலும் மயங்க் 18 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து வந்த திரிபாதி மெதுவாக ஆடினார். உடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த போது திரிபாதி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ப்ரூக் களமிறங்கினார்.

இரு அணிகளும் 6 புள்ளிகளை பெற்றுள்ளதால் 10 புள்ளிகள் பெற இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகன்றன. 6.2 ஓவர் முடிவில் ஐதராபாத் 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!