லட்டுக்கு சோதனை மேல் சோதனை.. குட்காவை தொடர்ந்து பிரசாதத்தில் இருந்த எலி!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 6:06 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாத விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் அடுத்தடுத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

நேற்று திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் ஒன்று இருந்ததாக வீடியோ ஒன்று வைரலானது. தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்த நிலையில் விநாயகர் கோவில் பிரசாதத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோவில் உள்ளது. பிரசத்தி பெற்ற இந்த தோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க: செல்லூர் ராஜூ பெயரில் கோடிக்கணக்கில் மோசடி : பின்னணியில் கவுன்சிலர்.. மதுரையில் பகீர்!

இந்த நிலையி தான் கோவிலில் வைக்கப்பட்டிருந்த பிரசாத லட்டுகளுக்கு மத்தியில் எலிக்குஞ்சுகள் இருப்பது போல புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்துள்ளது போல புகைப்படமும் வைரலாகி வருவது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து பிரசாத விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் கோவில் பிரசாதங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!