திமுகவின் பினாமி மாநாட்டை நடத்தியுள்ளார் ஓபிஎஸ்… விரைவில் தக்க பதிலடி கொடுப்போம் : ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

Author: Babu Lakshmanan
25 April 2023, 3:55 pm

OPS திருச்சியில் நடத்தியது திமுகவின் பினாமி மாநாடு என்றும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் காலம் விரைவில் வரும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பேசியுள்ளார்.

மதுரை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- நேற்று திருச்சியில் OPS நடத்தியது அதிமுக மாநாடு அல்ல. திமுக அரசு ஸ்டாலினின் பினாமி மாநாடுதான் அது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. 30 ஆயிரம் கோடி ஊழல் என நிதியமைச்சரே கூறியுள்ளது குறித்து தமிழகத்தில் பல பரபரப்பான சூழல் உள்ளபோது, சிறிய குறை கூட ஆளும் திமுக அரசு பற்றி கூறாமல், அதிமுவை பற்றியே தொடக்கத்திலிருந்து முடியும் வரை ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

அவருக்கு தமிழக போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருந்து தெரியவேண்டாமா, அது திமுக அரசின் பினாமி மாநாடு என்று. உண்மையான அதிமுக கட்சி கொடி, சின்னம், பொதுச்செயலாளர் என அனைத்துக்கும் சொந்தக்காரர் என எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதை மதிக்காமல், மீறி ஓபிஎஸ் செயல்படுகிறார்.

உண்மையான அதிமுக மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ளது. அதுதான் உண்மையான அதிமுக மாநாடு. ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. அவருக்கு காலம் தக்க பதில் அளிக்கும், என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 357

    0

    0