பெற்றோர் இல்லாமல் தொடங்கிய மாணவியின் உடல் மறுகூராய்வு : தனியார் பள்ளியில் மாணவி விழுந்த இடத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 4:38 pm

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல் மறுகூராய்வு பணி தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என கூறியிருந்த இருந்த நிலையில், தற்போது தான் தொடங்கியுள்ளது. மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு பிரேத பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மறு பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவியின் பெற்றோர் தற்போது வரை வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மறு உடற்கூராய்வு செய்வதற்கு முன்பு பள்ளியில் மாணவி இறந்து கிடந்த இடத்தில் மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் மறு உடற்கூராய்வை பெற்றோர் இல்லாமலே நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

உடல் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் முறையீடு செய்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பெற்றோர் வரவில்லை என தகவல் கூறப்படுகிறது. இருப்பினும், மறு உடற்கூராய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி எஸ்பி ஜியா உல் ஹக் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீமதி தங்கி இருந்த விடுதி அறை மற்றும் அவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்படும் இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு ரத்தக்கறை படிந்ததாக கூறப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அந்த தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஸ்ரீமதி சடலமாக கிடந்த இடத்தில் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி விழுந்ததாக கூறப்படும் 3வது மாடியில் பெண் போன்று ஒரு பொம்மையை கீழே வீசி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 784

    0

    0