கூடவே இருந்து கழுத்தறுப்பது தான் அண்ணாமலையோட வேலை.. எதற்கும் தயார் : மீண்டும் பற்ற வைத்த திருச்சி சூர்யா!
Author: Udayachandran RadhaKrishnan24 June 2024, 11:23 am
தமிழிசை குறித்து விமர்சித்த திருச்சி சூர்யா சிவா அண்மையில் பாஜகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யா தற்போது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை குறித்து பதவிடடிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதில், உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா?
அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும்.
அதிகபட்சம் அமார் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார்.
கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே…எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்…