மக்களவை தேர்தலுக்கு தயார்… தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டி? சுற்றுப்பயணம் செல்லும் குஷ்பு?!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 ஜூன் 2023, 3:16 மணி
Kushboo - Updatenews360
Quick Share

நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய பின்னர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்திருந்தார். அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

இந்த நிலையில் காலை கிண்டி ஹோட்டலில் அவர் பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து கோவிலம்பாக்கத்தில் உள்ள தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்தார். இந்த கூட்டத்தில் குஷ்பு, எச் ராஜா, நமீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எச் ராஜா பேசுகையில் அன்று அமித்ஷா வரும் போது கருப்பு பலூன் விட்டார்கள். இன்று கரென்ட்டை கட் செய்துள்ளார்கள். இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவருக்கே இந்த நிலை. சாதாரணமாக மின் வெட்டு நடப்பது சகஜம்தான். ஆனால் அமித்ஷா வருகிறார் என தெரிந்தும் மின்வெட்டு நடந்திருப்பது பெரும் கண்டனத்துக்குரியது. தமிழகத்திற்கு அமித்ஷா வருகைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் வருகை குறித்து குஷ்பு கூறுகையில், தமிழகத்திற்கு அமித்ஷா வருகை தந்துள்ளது எங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறாரே. இது வரை இவர் தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்.

மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றையே ஸ்டாலின் செயல்படுத்துகிறார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 5000 கொடுத்துள்ளோம். இதை நாங்கள் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்கவில்லையா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் போய் சேர வேண்டும். ஒரு வேளை அந்த திட்டம் போய் சேரவில்லை என்றால் ஏன் சேரவில்லை என்பதை முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். அமித்ஷாவின் வருகை தேர்தலில் எதிரொலிக்கும். கூட்டணி கட்சியில் இருந்தாலும் தங்கள் கட்சியை வளர்க்க தனியே சில வியூகங்களை வகுக்கத்தான் வேண்டும். அதைதான் இன்று செய்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. நான் போட்டியிடுகிறேனா இல்லையா என்பதை எல்லாம் கட்சித் தலைமை சொல்லும். நான் சொல்ல முடியாது. அது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 371

    0

    1