வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய தயார்.. சுப்பிரமணியன் சுவாமி திடீர் அறிவிப்பு.. பரபரப்பு காரணம்!!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2024, 5:01 pm
வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயார்.. சுப்பிரமணியன் சுவாமி திடீர் அறிவிப்பு.. பரபரப்பு காரணம்!!
சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு முக்கிய கோரிக்கையை அவர் வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் அவரை தோற்கடிக்க பிரசாரம் செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோடி ஞானவாபி ஏரியாவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை விடுவித்து அங்கு மீண்டும் கோவில் கட்ட வேண்டும்.
மசூதிக்கு மாற்று நிலம் கொடுப்பதாகவும் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் அவரை தோற்கடிக்க பிரச்சாரம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.