48 மணி நேரம் கெடு… ஊழலை நிரூபிக்க தயாரா? தவறினால் அமைச்சர் பதவியில் இருந்து விலகணும்… அமைச்சருக்கு அண்ணாமலை சவால்!!!
Author: Udayachandran RadhaKrishnan24 November 2023, 6:17 pm
48 மணி நேரம் கெடு… ஊழலை நிரூபிக்க தயாரா? தவறினால் அமைச்சர் பதவியில் இருந்து விலகணும்… அமைச்சருக்கு அண்ணாமலை சவால்!!!
ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 4 புள்ளி 5 சதவீதம் கொழுப்புச் சத்தது கலக்கப்பட்ட 40% பங்குள்ள பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், அரசியல் சுயலாபத்திற்காக சிலர் ஆவினுக்கு எதிராக பேசுவதாகவும், வடமாநில நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று ஆவினுக்கு எதிராக அண்ணாமலை போன்றோர் பேசுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை தனது X தளப்பதிவில், இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.
உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு என பதிவிட்டுள்ளார்.