அப்படி ஒரு சூழல் வந்தால் ஓபிஎஸ்சை கூட்டணியில் இருந்து கழட்டி விட தயார் : டிடிவி தினகரன் பகீர்!!!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2023, 2:10 pm
அப்படி ஒரு சூழல் வந்தால் ஓபிஎஸ்சை கூட்டணியில் இருந்து கழட்டி விட தயார் : டிடிவி தினகரன் பகீர்!!!
தஞ்சையில் தனியார் விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்;- உதயநிதி அடுத்தவர் மத உணர்வை பாதிப்பது போல் பேசியது தவறு. அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டி தனம். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசியுள்ளர். சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார்.
அப்போது உள்ள காலத்தில் சனாதனம் உருவாக்கப்பட்டது. அது எல்லா காலத்திற்கும் பொருந்தாது. கலைஞர், ஸ்டாலின் எல்லோரும் கடவுள் நம்பிக்கையை எதிர்த்து பேசுவார்கள். ஆனால் அவர்கள் வீட்டு பெண்கள் புரோகிதரை அழைத்து சாமி கும்பிடுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி பச்சோந்தி மாதிரி, அவர் ஆட்சியில் இருக்கும் போது ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்பார். இப்போது வேண்டும் என்பார். ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் ஆகாது.
அப்படி வைத்தால் யார் மத்தியில் வெற்றி பெற்றாலும் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரும். ஓணத்திற்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவிக்கிறார் முதல்வர்.
பெருமாளின் 10 அவதாரத்தில் வாமன அவதாரம் தான் பிராமன அவதாரம் அது தான் ஓணம் பண்டிகை. அப்படி என்றால் பிராமணர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார் என்று அர்த்தம்.
1998-ம் ஆண்டு ஈடி சார்பில் போடப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை மதித்து நடப்போம். ஆனால் அபராத தொகை அதிகம் என்பதாலும் இந்த தொகை செலுத்தினால் நான் தவறு செய்தவர்கள் ஆகிவிடுவோம். அதனால் தான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தீய சக்தியும் ஜெயிக்கக்கூடாது. துரோக சக்தியும் ஜெயிக்கக்கூடாது என்பது எங்களின் நோக்கம். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேருவதை அமமுக தொண்டர்கள் விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் எனது ஆசை.
2019ம் ஆண்டு தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றது. அந்த சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது, திமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக்கான வாய்ப்புகளை சொன்னேன். அதற்காக நாங்கள் பலவீனமாகிவிடவில்லை.
வருங்காலத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என இருவரும் முடிவெடுத்துள்ளோம். ஒருவேளை தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணிக்கு ஓபிஎஸ் சென்றுவிட்டால், நட்பு ரீதியாக நீங்கள் அங்கு இருங்கள், நான் தனியாக போட்டியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் வேண்டிய நிவாரணங்களை பெற்று தர வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.