கோவையில் 50,000 பஞ்ச் மற்றும் 50,000 ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை: நோபள் புத்தகத்தில் இடம்பெற்ற மாணவர்கள்..!!

Author: Rajesh
20 March 2022, 8:38 am

கோவையில் 250 மாணவ,மாணவிகள் இணைந்து 50,000 பஞ்ச் மற்றும் 50,000 ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்.

கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் 250 மாணவ,மாணவிகள் இணைந்து 50,000 கராத்தேவின் பஞ்ச் எனப்படும் குத்து முறையை ஐம்பதாயிரம் முறையும், இதனை தொடர்ந்து பதினைந்து நிமிடங்களில் கையில் ஒற்றை சிலம்பத்தை ஐம்பாதயிரம் முறை சுற்றியும் சாதனை படைத்துள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சி கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பாக நடைபெற்றது. ஐந்து வயது முதல் இருபது வயது வரையிலான மாணவ,மாணவிகள் சீரான இடை வெளியில் ஆறு வரிசைகளில் நின்று இந்த சாதனையை செய்து அசத்தினர்.

ஐம்பதாயிரம் பஞ்ச் மற்றும் ஒற்றை சிலம்பம் சுற்று எண்ணிக்கையில் செய்த இந்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்த குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரிவித்தார். இதில் நோபள் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ்,மாஸ்டர் பஞ்சா,மாஸ்டர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!