ரெட் ஜெயண்ட் என குறிப்பிட்டு சொல்ல பயமா..? திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 4:01 pm

ரெட் ஜெயண்ட் என குறிப்பிட்டு சொல்ல பயப்படுகிறீர்களா..? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இரும்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. கார்ப்பரேட் மயமாவதை தடுக்க போராட வேண்டியிருக்கிறது.

முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்து, குறைந்த விலையில் விநியோகம் செய்தார்கள். ஆனால், தற்போதைய நிலையே வேறு. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்.? திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி கொண்டிருக்கிறது, எனக் கூறியிருந்தார்.

திருமாவளவன் யாரை குறிப்பிட்டு இப்படி பேசினார் என தெரியவில்லை. ஆனால், சமீப காலமாக தமிழகத்தில் பெரும்பாலான படங்களின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்று வருவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தது.

இந்த நிலையில், திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ‘ரெட் ஜெயண்ட் ‘என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கில்லையா?
மிடுக்கில்லையா? , எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த டுவிட்டர் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 541

    0

    0