கர்நாடகாவில் மாடல் அழகிகளை கொண்டும், பொய்யான ஏகே 47 துப்பாக்கியை வைத்திருக்கும் பாதுகாவலர்களை அருகில் வைத்துக் கொண்டும் தொடர்ந்து பல இன்ஸ்டா ரீல்களை வெளியிட்டு பிரபலமானவர் அருண் கட்டாரே.
ஒவ்வொரு நாளும் சொகுசு கார்கள் துப்பாக்கியுடன் உள்ள பாதுகாவலர்கள் உடல் முழுவதும் தங்க நகைகள் ஆடம்பர உடைகள் ஆகியவற்றை கொண்டு தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்தவர் அருண் கட்டாரே.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்கு சொகுசு படகுகளை வாடகைக்கு எடுத்து அதில் பல மாடல் அழகிகளை வாடகைக்கு எடுத்து அதன் மூலமாகவும் பல ரீல்ஸ்களை வெளியிட்டுள்ளார் இவர்.
அண்மையில் பெங்களூரு நகரில் சொகுசு காரில் அவர் வந்து ஏறும்போது மெய்காவலர்கள் ஏகே 47 துப்பாக்கியுடன் அவரை பாதுகாத்து வரும் வீடியோக்கள் வந்தது.
பொது இடங்களில் இவ்வாறான போலியான துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு இவர் ரீல்ஸ் வெளியிட்ட நிலையில் அதை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இவருக்கு எதிராக பலர் காவல் துறையில் ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பவே அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆயுதச் சட்டம் மற்றும் ஐ பி சி 290 பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். ரீல் காட்சிக்கு பிரபலமான அந்த இளைஞன், இப்போது பரப்பன அக்ரஹாராவில் அடைக்கப்பட்டுள்ளான்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.