பயங்கரவாத ஒத்திகை? தீபாவளியை சீர்குலைக்க சதி? முதலமைச்சரே மவுனமா இருந்து என்ன பண்ண போறீங்க : கொதித்த வானதி சீனிவாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2022, 6:19 pm
Vanathi Ask Stalin - Updatenews360
Quick Share

கோவை கார் வெடி விபத்து விவகாரத்தில், மூன்று நாட்களாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் மௌனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், கோவை கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறி சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காரில் இருந்த ஜமேசா முபின் உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜமேசா முபின் வீட்டில், காவல் துறை நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான அம்மோனியம் நைட்ரேட், பேட்டரி, இரும்பு ஆணிகள் உளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமேசா முபினை, ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு, கலவரங்கள் என, கோவை 25 ஆண்டுகளுக்கு, பயங்கரவாதிகளின் இலக்காக இருந்த மாநகரம் கோவை. கோவை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அதில் காயமடைந்தவர்களின் இன்னமும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே, இந்த கார் வெடிப்பு சம்பவத்தை, சிலிண்ட் வெடிப்பு என, சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது, இது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை? தீபாவளி கொண்டாடங்களை சீர்குலைக்க நடந்த சதியா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்.

ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில் திரு. ஸ்டாலின் அவர்கள், நடந்த சம்பவத்திற்கு கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும்.

1998 போல நடந்து விடுமோ, கோவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று நாட்களும் மௌனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.

பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில், எவ்வித சமரசத்திற்கு தி.மு.க. அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 322

    0

    0