பியூஷ் கோயல் நீக்கம் : நட்டாவுக்கு எகிறும் மவுசு… பாஜகவில் நடந்த அதிரடி மாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2024, 8:13 pm
Nadda
Quick Share

ஜே.பி. நட்டா முதன்முதலில் 2012 இல் ராஜ்யசபாவிற்கு, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இல் அமித் ஷா கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற போது பாஜகவின் பாராளுமன்றக் குழுவில் உறுப்பினர் ஆனார்.

தற்போது இரண்டு முறை பாஜக தலைவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜேபி நட்டா ராஜ்யசபாவின் பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலாக பாஜக மாநிலங்களவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், கோயல் ராஜ்யசபாவில் பாஜக தலைவராக இருந்தார்.

சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேபி நட்டா சுகாதாராதுறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.மத்திய அமைச்சர்கள் குழுவில் நட்டாவைத் தவிர, 11 உறுப்பினர்கள் மேல்சபையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 114

0

0