செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மீண்டும் சிக்கல்.. 35வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 4:51 pm

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மீண்டும் சிக்கல்.. 35வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இதன்பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் கடந்த ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். பல முறை ஜாமீன் கோரியு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய இருப்பதால், இன்று காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 30ம் தேதி வரை மீண்டும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

எனவே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 30 தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: மதுபோதையில் மகனுக்கு நேர்ந்த கதி.. தந்தை அதிரடி கைது : கோவையில் Shock!!

மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!