மீண்டும் மீண்டும்… முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 50வது முறையாக காவல் நீட்டிப்பு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2024, 6:27 pm

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது.

ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது நீதிபதிகள், ‘கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்’ என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இன்று காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்தனர். விசாரணையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 260

    0

    0