பண மதிப்பிழப்பில் 2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் பேங்க் வைத்த செக்: வெளிவந்த முக்கியத் தகவல்…!!

Author: Sudha
2 August 2024, 9:43 am

நவம்பர் 8, 2016 நள்ளிரவு முதல் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

இதைப்போலவே கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.வங்கிகளில் அவற்றை டெபாசிட் செய்ய அக்டோபர் 7 ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது.மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 97.92 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அக்டோபர் 8 முதல் அக்டோபர் சென்னை பெங்களூரு உள்ளிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது.

புழக்கத்தில் இருந்த 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளில் தற்போது 97.92% திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தற்போது பொது மக்களிடம் 7,409 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 நோட்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவற்றை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?